உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்

பிரசாதம் இது பிரமாதம்

அய்யங்கார் புளியோதரை

தேவையான பொருட்கள்:

சாதம்        – 2 கப்
புளிக்காய்ச்சல்        – தேவையான அளவு
நல்லெண்ணெய்        – 3 டேபிள் ஸ்பூன்
தோல் நீக்கிய வேர்க்கடலை   –  2 டேபிள் ஸ்பூன்
கடுகு        – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு        – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு    – 1 டீஸ்பூன்
வரமிளகாய்        – 2
கறிவேப்பிலை        – சிறிது
நாட்டுச்சர்க்கரை    – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்        – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்    – 1 சிட்டிகை
புளி        – 1 எலுமிச்சை அளவு
உப்பு        – தேவையான அளவு

பொடி தயாரிக்க:

எண்ணெய்        – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு        – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு    – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி        – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல்    – 2
வெந்தயம்        – 1/2 டீஸ்பூன்
எள்        – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்சியில் பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுக்க வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் உப்பு சேர்த்து, பின் புளிச்சாற்றினை ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை சேர்த்து, தேவையான அளவு
உப்பு சேர்த்து கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து கிளறவும். மூடி வைத்து 30 நிமிடம் கழித்து பரிமாறவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !