ஆதிஜெகநாதப்பெருமாள் கோவிலில் வசந்த உற்ஸவ விழா
ADDED :2374 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் ஜூன் 10 முதல் 13 வரை வைகாசி வசந்த உற்ஸவ விழா கோலாகலமாக நடக்கிறது.
சக்கரதீர்த்தக் குளத்தின் முன்புறமுள்ள அலங்கார மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் மாலை 5:00 முதல் இரவு 7:35 மணிவரை எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அலங்கார மின்னொளியுடன், சர்வ அலங்காரத்தில் உற்ஸவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோயில் பட்டாச்சாரியர்களால் விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள்பாடப்பட்டன. இரவில் உற்சவமூர்த்திகள் கோயிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை திவான் கே.பழனிவேல்பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பஷே்கார் கண்ணன் செய்திருந்தனர்.