திருநள்ளார் பிரம்மோற்சவம்: ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா
ADDED :2373 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று முன்தினம் இரவு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
சனி பரிகார ஸ்தலமான திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. தினம் விநாயகர், சுப்ரமணியர், அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு உற்சவ வீதியுலா,செண்பகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது.நேற்று முன்தினம் இரவு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை தேர் திருவிழா நடைபெறுகிறது. நாளை 13ம் தேதி சனீஸ்வரர் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி தெப்போற்சவம் நடைபெறுகிறது.