உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மனுக்கு மாவிளக்கு பூஜை

மாகாளியம்மனுக்கு மாவிளக்கு பூஜை

 மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - கோத்தகிரி ரோடு ராமசாமி நகரில் உள்ள மகா மாகாளியம்மன் கோவில், 37ம்ஆண்டு திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.

பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், சிறப்பு பூஜைகளும் நடந்தன.அம்மன் திருக்கல்யாணம், சக்திகரகம் அழைத்தல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராமசாமி நகர் விநாயகர் கோவிலிலிருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். நேற்று மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியில் ஊர் பொது மக்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !