உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவ விழாவில் புரோக்கர்கள் பணம் பறிக்க திட்டம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவ விழாவில் புரோக்கர்கள் பணம் பறிக்க திட்டம்

காஞ்சிபுரம்:அத்தி வரதர் வைபவத்தின்போது, பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் புரோக்கர் கள் பலர், தயாராகி வருகின்றனர். அவர்களை, கோவில் அருகிலிருந்து அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஜூலை, 1ல் துவக்கம்காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ல், 40 ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் வைபவம் நடைபெறவுள்ளது. லட்சக்கணக் கான பக்தர்கள் வருகை தரவுள்ள இந்த நிகழ்வுக்காக, வெளியூர், வெளிநாடு களில் உள்ள பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருப்பது போல், வரதர் கோவிலை அன்றாடம் சுற்றி வரும் புரோக்கர்களும், அத்தி வரதர் வைபவத்துக்காக காத்திருக்கின்றனர்.வழக்கமான நாட்களி லேயே, வெளியூர் பக்தர்களை ஏமாற்றி, 500 முதல் 1,000 ரூபாய்க்கு, சிறப்பு தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக, ஏமாற்றி வருகின்றனர்.

இதை தொழிலாக உடைய புரோக்கர்களுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் அத்தி வரதர் வைபவம் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.சிறப்பு தரிசனம் செய்ய, தாங்கள் அழைத்து செல்வதாகவும், அத்தி வரதரை அருகில் நின்று தரிசிக்கலாம் எனவும், புரோக்கர்கள் பலர், பக்தர்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. இதற்காக, ஆயிரக்கணக்கில் வசூலிக்க திட்டமிடுவர்.ஆனால், அத்தி வரதர் சிறப்பு தரிசனத்திற்கு, 50 ரூபாய் மட்டுமே என, அறநிலையத் துறை அமைச்சர், சேவூர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.பாதுகாப்பு இல்லைஇதை அறியாத வெளியூர், வெளிநாட்டு பக்தர்களிடம், புரோக்கர்கள், மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

எனவே, விஷ்ணுகாஞ்சி போலீசார், வரதர் கோவிலை சுற்றி வலம் வரும் புரோக்கர்களை அடையாளம் கண்டு, அங்கிருந்து அவர்களை அகற்றினாலே, வெளியூர் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யலாம்.ஆனால், போலீசார் இந்த விஷயத்தில் அக்கறை காட்டுவாரா என, சந்தேகம் எழுகிறது. முன்பெல்லாம், வரதர் கோவில் வாசலில் எப்போதும் போலீசார் இருப்பர். கோவில் அருகே ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். இதனால், புரோக்கர்களும் அப்பகுதிக்கு வர தயங்கினர்.

ஆனால், சில ஆண்டு களாகவே, கோவில் வெளியே எந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை.இது, புரோக்கர்களுக்கு வாய்ப்பாக அமைவதால், பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், புரோக்கர்களை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !