சரநாராயண பெருமாள் கோவிலில் அன்னக்கூடை படையல் உற்சவம்!
ADDED :5048 days ago
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அன்னக்கூடை படையல் உற்சவம் நேற்று நடந்தது. உலக நன்மை வேண்டி நடந்த உற்சவத்தையொட்டி காலை 6 மணிக்கு நடை திறப்பு. 7 மணிக்கு மூலவர் சரநாராயண பெருமாள், தாயார், சயனநரசிம்மர் சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவர் பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், தொடர்ந்து 12 மணிக்கு அன்னக்கூடை படையல் உள் புறப்பாடு நடந்து மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவிக்கு சிறப்பு பூஜை, அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தலைமை அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.