பட்டத்தரசியம்மன் கோவில் திருவிழா
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம் ரோடு, விவேகானந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடந்தது. விழா கடந்த, 28 ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. பூக்கம்பம் நடுதல், கம்பம் சுற்றி ஆடுதல், முனியப்பன் பூஜை, கிடாய் வெட்டு, ரத்தசோறு வீசி துஷ்டதேவதைகளை அடக்குதல் நடந்தன.
கடந்த, 11 ம் தேதி இரவு ஆபரணம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பு, ஜலம் எடுத்து வருதல், மதுரை வீரன், வெள்ளையம்மா, பொம்மியம்மா, பட்டத்தரசியம்மன் உருவாரங்கள் ஊர்வலமாக எடுத்து வருதல் ஆகியன நடந்தன. சீர்வரிசையுடன் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பெரியநாயக்கன் பாளையம் சந்தைப் பேட்டை இருந்து, சக்திக் கரகங்கள் மேளதாளங்களுடன், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து, பட்டத்தரசியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.