மதுரை காஞ்சி காமகோடி பீடத்தில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :2338 days ago
மதுரை:மதுரை பெசன்ட்ரோடு காஞ்சி காமகோடி பீடத்தில் சொற்பொழிவு நடந்தது. மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
குருமகிமை தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பேசியதாவது:உலகில் மிகப் பெரியது நவக்ரஹ இயக்கம். மனித ஜென்ம வாழ்க்கை அதன்படியே நடக்கிறது. சூரியன், சந்திரன் சாதகமற்ற நிலையில் இருந்தால் தாய், தந்தையரை பாதிக்கும். புதன் சாதக நிலை புத்தி வலிமையை கொடுக்கும்.
குரு அருளால் வந்த வினை தலைக்கு வந்து தலைப்பாகையுடன் போனதுபோல் ஆகிவிடும். மங்கலம் எனும் பெயர் கொண்ட ஊர்கள் மன்னர்களால் அந்தணர்களுக்கு வழங்கியது. பள்ளி எனும் பெயர் கொண்ட ஊர்கள் சமணப் பள்ளி இருந்தவை, என்றார். பொருளாளர் ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.