காரமடையில் ரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் உற்சவம்
ADDED :2337 days ago
காரமடை:காரமடை ரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் உற்சவம் நடைபெற்றது.பன்னிரு ஆழ்வார்களில் பிரதானமானவர் நம்மாழ்வார். திருவாய்மொழியை இயற்றியவர். வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார். நேற்று முன் தினம் (ஜூன்., 15ல்), காரமடை ரங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் உற்சவம் நடந்தது. அதிகாலை கோ - தரிசனம், கால சந்தி பூஜை, நம்மாழ்வார் விக்ரஹம் ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளி, நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர் ,போன்றவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலகாரத்தில் ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார்.