உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி ஆனந்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புவனகிரி ஆனந்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புவனகிரி: புவனகிரி திருவள்ளுவர் நகரில் ஆனந்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.புவனகிரி திருவள்ளுவர் நகரில் ஆனந்தாயி அம்மன் கோவில், 12 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது.இரு தினங்கள் காலை, மாலை சிறப்பு பூஜைகளுக்கு பின் 14ம் தேதி, நான்காவது கால விசேஷ யாகம், பல்வேறு பூஜைகளுக்கு பின் கடம் புறப்பாடாகி, 10.20 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !