வடலூர் அடுத்த பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :2337 days ago
வடலூர்: வடலூர் அடுத்த ஆபத்தாரனபுரம் பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா 14ம் தேதி நடந்தது.கடந்த 6ம் தேதி காலை கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. 13ம் தேதி புஷ்ப பல்லக்கில் சாமி வீதியுலா நடந்தது. 14ம் தேதி காலை 9 மணிக்கு அம்மன் திருக் கல்யாணமும், 10.30 மணிக்கு அக்னி மூட்டுதல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தேர் உற்சவமும் அதை தொடர்நது தீ மிதி திருவிழா நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காப்பு அணிந்து தீக் குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.