உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை அருகே நத்தம் ரோட்டில் கடவுளாக மாறிய வெட்டிய மரம்

மதுரை அருகே நத்தம் ரோட்டில் கடவுளாக மாறிய வெட்டிய மரம்

மதுரை: கலெக்டர் பங்களா அருகே 50 ஆண்டுகளாக நான் டீ கடை நடத்துகிறேன். கடைக்கு முன் 250 ஆண்டு பழமையான புளியமரம் ஒன்று இருந்தது. அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரித்து வந்தேன். இந்நிலையில் பறக்கும் பாலத்திற்காக மரத்தை வெட்டினர். 50 ஆண்டு மனிதர்கள், பறவைகள், பிற உயிரினங்களுக்கும் நிழல் கொடுத்த மரத்தை இழந்தது வேதனையாக இருந்தது.

வெட்டிய மரத்தை மீண்டும் நட்டு முளைக்க வைக்க முடியாது. அதனால் அந்த மரத்தின் நினைவாக அதன் அடிப்பாகங்களை எடுத்து கடைக்கு முன் நட்டு வைத்துள்ளேன். தினமும் அந்த மரத்திற்கு மஞ்சள் தெளித்து, பூ மாலையிட்டு கடவுளாக வழிபடுகிறேன்.

முன்னோர்கள் கூட மரங்களை யாரும் வெட்டக்கூடாது என்பதற்காக தான் கடவுளாக வழிபட்டனர். அதற்கு அருகில் புதிதாக ஒரு புளிய மரக்கன்று ஒன்றை நட்டுள்ளேன். இதே போல் இப்பகுதியின் பழமையான மரங்கள் வெட்டி அழிக்கப்படுகிறது. மரங்களை வெட்டாமல் பாலம் அமைக்கும் தொழில்நுட்பத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !