சின்னசேலம் மழை வேண்டி முஸ்லிம்கள் தொழுகை!
ADDED :2327 days ago
சின்னசேலம்: சின்னசேலம் நகரில் உள்ள முஸ்லிம்கள்முங்கில் பாடியில் உள்ள ஈக்தா மைதானத்தில் மழை வேண்டி தொழுகை நடத்தினர்.தொழுகையில், அம்சாகுளம், உயர்நிலை பள்ளி எதிரில், விஜயபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட நான்கு பள்ளி வாசலைச் சேர்ந்த முஸ்லிம் கள் திரளாக பங்கேற்று, முத்தவல்லிகள் பாபு, ராகீம்பாய், அப்தப்மஜித், நூர்முகமது தலைமை யில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.தொழுகையில், கணியமூர், எலியத்தூர், அம்மையகரம், மேல்நாரியப்பானூர், கருந்தாலகுறிச்சி, மரவானத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் பங்கேற்றனர்.