/  
                        கோயில்கள்  செய்திகள்  /  கள்ளக்குறிச்சி விளாம்பார் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தேர்விழா
                      
                      கள்ளக்குறிச்சி விளாம்பார் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் திருத்தேர்விழா
                              ADDED :2327 days ago 
                            
                          
                           கள்ளக்குறிச்சி: விளாம்பார் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருத்தேர் விழா நாளை 19ம் தேதி நடக்கிறது.கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. இன்று 18ம் தேதி கழு மரம் ஏறுதல், நாளை 19ம் தேதி காலை 8:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், காலை 9:00 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக மாலை 3:00 மணிக்கு திருத்தேர் விழா நடக்கிறது. விழாவிற் கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்துள்ளனர்.