விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :2573 days ago
விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் 7 ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கோயில் உள்பிரகாரத்தில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு வேத விற்பன்னர்களால் ருத்ர ஹோம மந்திரங்கள் ஓத 1008 சங்குகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 108 கலசத்தில் புனித நீர் ஊற்றி மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.