உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் காஞ்சி மகா பெரியவருக்கு பேரூரில் மணி மண்டபம்

கோவையில் காஞ்சி மகா பெரியவருக்கு பேரூரில் மணி மண்டபம்

கோவை:பேரூர், சொர்க்கவாசல் வீதியில் உள்ள சாமவேத பாராயண மடத்தில், காஞ்சி மகா பெரியவர் விக்ரஹம் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம், வரும், 27ல் நடக்கிறது.

சாமவேத பாராயணம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் லட்சுமண ஸ்ரவுதிகள் கூறியதா வது: பேரூர் பட்டீஸ்வரர் கோவில், சொர்க்கவாசல் வீதியில் உள்ள சாமவேத பாராயண மடத்தில், காஞ்சி காமகோடி, 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (மகா பெரியவர்) மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டுள்ளது.

மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹம் பிரதிஷ்டை, ஆதிசங்கரர், வேத வியாஸர் மற்றம் ஜெயேந்திரர் விக்ரஹங்கள் நிறுவப்பட உள்ளன.மணி மண்டப கும்பாபிஷேக விழா, வரும், 23ல் துவங்குகிறது; கும்பாபிஷேகம், 27ம் தேதி காலை, 9:33 முதல், 11:30 மணிக்குள் நடக்கிறது. மகா பெரியவரின் விக்ரஹம் சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, ஆத்தூர், சேலம், ஈரோடு, பாலக்காடு, பெங்களூரு மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, பூஜை, ஆராதனை முடிந்து, கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்
கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !