உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் மழை வேண்டி வருண ஜெபம், ருத்ரயாக பூஜை

சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் மழை வேண்டி வருண ஜெபம், ருத்ரயாக பூஜை

சாயல்குடி : சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ராமையா நாடார் குடியிருப்பில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயிலில்உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும்சிறப்பு யாக வேள்விகள் நடந்தது.மூலவர் சுயம்புலிங்க சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

கும்பகோணம் திப்பிலிராஜபுரம் என்.சுவாமிநாதன் சிவாச்சாரியார் தலைமையில்15வேத விற்பன்னர்களால்ருத்ரயாகம், ருத்தியாபிஷேகம், தசோத்தாரா ஹோமம், பூர்ணாகுதி, கலசாபிஷேகம், வருணஜெப வேள்விகள் நடந்தது.சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம் நடந்தது.மழை வேண்டியும், நாடு செழிக்கவும் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை யில் ஈடுபட்டனர்.ஏற்பாடுகளை வெள்ளச்சி வகையறா, கோயில் விழாக்கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !