உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுவனஞ்சூரில் 22ம் தேதி ஸ்ரீராம நவமி விழா துவக்கம்

காட்டுவனஞ்சூரில் 22ம் தேதி ஸ்ரீராம நவமி விழா துவக்கம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஸ்ரீராம நவமி கற்போத்சவ விழா வரும் 22 ம் தேதி துவங்குகிறது.சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூர் கிராமத்தில் 35 வது ஆண்டு ராமநவமி கற்போத்சவ விழா துவங்குகின்றது. தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், அஷ்டபதி, திவ்யநாம பஜனை, பாகவத சமாராதனை நடக்கிறது. தொடர்ந்து 25 ம் தேதி ஸ்ரீசீதா கல்யாண உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சியில் சோமநாத பாகவதர், நடுக்காவேரி கிருஷ்ணமூர்த்தி பாகவதர், பிச்சுமணி பாகவதர், பட்டாபி பாகவதர், கோபி பாகவதர், லட்சுமி காந்தன் பாகவதர், வெங்கட்ராம பாகவதர், குப்புராஜ் பாகவதர், பாலகிருஷ்ண பாகவதர், கணேஷ் பாகவதர் உள்ளிட்ட பாகவதர்கள் ராமநவமியில் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் ராம மண்டலி தலைவர் வெங்கடேச பாகவதர் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !