உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கையம்மன் கோவிலில் 28ம் ஆண்டு தேரோட்டம்

துர்க்கையம்மன் கோவிலில் 28ம் ஆண்டு தேரோட்டம்

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது. துர்க்கை அம்மனுக்கு கடந்த வாரம், 28ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு தேராட்டம் நடந்தது. இதில், பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 6:00 மணிக்கு மேல், மின் விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நடந்தது. தேரை ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் துர்க்கையம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றிரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !