உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் சஞ்சீவி வீரமாருதி கோவில் கும்பாபிஷேக விழா

சூலுார் சஞ்சீவி வீரமாருதி கோவில் கும்பாபிஷேக விழா

 சூலுார்:சூலுார் ஷீரடி சாய்பாபா கோவில் வளாகத்தில், சஞ்சீவி வீரமாருதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

சூலுார் சி.கே. தேவர் வீதியில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், சஞ்சீவி வீரமாருதி பெருமானுக்கு, தனியாக சன்னதி அமைக்கும் பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா கடந்த, 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, முதல் கால ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. இரவு விமான கலசம் நிறுவப்பட்டது.நேற்று காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமம் நடந்தது. 8:00 மணிக்கு சஞ்சீவி வீரமாருதி பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தி மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !