பொன்னேரி அருகே, ஆனந்த கணபதி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :2392 days ago
பொன்னேரி : பொன்னேரி அருகே, ஆனந்த கணபதி கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.பொன்னேரி அடுத்த, அரவாக்கம் கிராமத்தில், ஆனந்த கணபதி கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அப்பணிகள் முடிந்து, நேற்று (ஜூன்., 23ல்) மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கடந்த, 21ம் தேதி முதல், கங்கை பூஜை உட்பட பல பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று (ஜூன்., 23ல்) காலை, 10:00 மணிக்கு ஆனந்த கணபதி கோவில் விமான கலசங்கள் மற்றும் பரிவார தேவதைளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், அரவாக்கம், மத்ராவேடு, தேவராஞ்சேரி, ஏருசிவன் உள்ளிட்ட, பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆனந்தகணபதியை நெஞ்சுருக வணங்கி சென்றனர்.