திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :2311 days ago
ஊத்துக்கோட்டை : திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, விரதமிருந்து தீமிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, மாம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. திரவுபதி அம்மன் கோவில், பழமை வாய்ந்த இக்கோவிலில், மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு, 14ம் தேதி, காப்பு கட்டப்பட்டது.
ஒவ்வொரு நாளும், படுகளம், பக்காசூரன் வதம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவின் முக்கிய நாளான, நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, விரதமிருந்து தீமிதித்தனர்.பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.