கோயிலுக்கு செல்வதன் அவசியம்
ADDED :2311 days ago
வாரம் ஒருமுறையாவது கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் வழிபட்டால் போதாதா என சிலர் கேட்கலாம். எங்கும் பரவியிருக்கும் கடவுளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பது அவசியம். பூமிக்கடியில் நீரோட்டம் பரவி இருந்தாலும், ஆழ்துளை கிணற்றின் மூலமே தண்ணீர் பெறுகிறோம். அதுபோல கோயில் வழிபாட்டின் மூலமே இறையருளை பெற முடியும். அதிலும் பவுர்ணமி நாட்களில் மலைக்கோயில் வழிபாடு இன்னும் சிறப்பு. முழுநிலவின் குளிர்ந்த கிரணங்கள் (கதிர்கள்) நம் மீது பட்டால் உடல்நலம், மனநலம் அதிகரிக்கும். ஹோமம், சிறப்பு பூஜை என எதுவும் செய்யவில்லை என்றாலும் கோயில்களில் நடக்கும் அவற்றை தரிசித்தாலே புண்ணியம் சேரும்.