நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :2442 days ago
நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் சிவாலயங்களில் நேற்று முன்தினம் (ஜூன்., 25ல்) தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு, கைலாசநாதர் கோவில், சி.என்.பாளையம் சொக்கநாதர், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் (ஜூன்., 25ல்) தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு அன்று இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.