உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆன்மிக சங்கமம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆன்மிக சங்கமம்

பண்ருட்டி: வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்த ஆன்மிக சங்கம நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை, வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆன்மிக சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

இதில், திருஞானசம்பந்தர் மடாதிபதி சிவாக்ரதேசிகர் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.

இதில் எம்.எல்.ஏ.,மோகன் , நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எக்ஸ்னோரா, செந்தமிழ் சங்கம், முத்தமிழ் சங்கம், துர்க்கை வழிபாட்டு மன்றம், வராஹி வழிபாட்டு மன்றம், சிவனடியார்கள், சிவ தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !