உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் உண்டியல் திறப்பு

அழகர்கோவிலில் உண்டியல் திறப்பு

அலங்காநல்லூர்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல்கள் திருக்கல்யாண மண்டபத்தில் திறந்து எண்ணப்பட்டன.

இதில் தங்கம் 59 கிராம், வெள்ளி 299 கிராம், 30,55,207 ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன. இக்கோயிலின் துணை கோயிலான சோலைமலை முருகன் கோயில் உண்டியல்களும் எண்ணப்பட்டன. தங்கம் 5 கிராம், வெள்ளி 353 கிராம், 9,11,854 ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு டாலர் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் ஐயப்பா சேவா சங்கத்தினர், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !