உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத் தடை நீக்கும் வேணுகோபாலகிருஷ்ணன்

திருமணத் தடை நீக்கும் வேணுகோபாலகிருஷ்ணன்

கம்பம்: கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. என்னதான் வீட்டில் வழிபட்டாலும் கோயிலிற்கு சென்று மனதை ஒரு முகப்படுத்தி இறைவனை வழிபடுவது திருப்தி தரும். அதுதான் இந்து கலாசார பெருமையாகும். அந்த வரிசையில் கம்பத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயில் மிகவும் பழமையானதாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் யாதவ சமுதாயத்தினர், கம்பம் வந்த யாத்ரிகர்களுக்கென உணவு வழங்கி உபசரிக்க மடாலயம் அமைத்தனர். அதற்குள் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உருவானது. மிகவும் பழமையானதும், புராதானதுமான இந்த கோயிலில் சமீபத்தில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கிழக்கு நோக்கி தனது வலது காலை மடக்கிய படி, தனக்கு பின்புறம் நிற்கும் பசுவின் மேல் சாய்ந்தபடி புல்லாங்குழலுடன் காந்த புன்னகையுடன் நிற்கும் வேணு கோபால கிருஷ்ணனை பார்க்க கண் கோடி வேண்டும் ஆம்.... அவரை தரிசித்தாலும், அவரிடம் வேண்டுதல் வைத்தாலும் உடனே நிறைவேறும். குறிப்பாக திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டினால் தடை நீங்கி திருமணம் நடைபெறும். அதன் பின் மூலவருக்கு வஸ்திரம் எடுத்து வந்து, கற்கண்டு சாதம் தயாரித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவர். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். இந்த கோயிலில் புதிதாக கஜாநநன், மகாலட்சுமி, சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கல்விககு அதிபதியான லட்சுமிஹயக்ரீவர் உள்ளிட்ட உபசன்னதிகள் அமைக்கப்பட்டது. இதில் கஜாநநன் என்பது விநாயகரின் அம்சமாகும்.

ராமபிரான் பட்டாபிஷேகத்தின் போது, நெற்றியில் நாமத்துடன், மிருதங்கம் வாசித்துக் கொண்டிருப்பார். இந்த கஜாநநன் பிற கோயில்களில் காண்பது அரிது. அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய திருவிழா நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு 73734 11199


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !