புவனகிரியில் மந்த்ராலய பீடாதிபதி அருளாசி
புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திர சுவாமிகள் பிறந்த இல்லத்தில் மந்த்ராலய பீடாதிபதி பாலாலய பணிகள் குறித்து ஆய்வு செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
ராகவேந்திர சுவாமிகள் அவதார ஸ்தலமாகிய புவனகிரியில் உள்ள கோவிலில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். மகான் அவதரித்த இல்லத்தில் உள்ள மடாலயத்தின் கும்பாபிஷே கம் மேற்கொள்வதற்காகன முன் ஏற்பாடுகள் குறித்து, மந்திராலயத்தின் பீடாதிபதி ஸ்ரீசுபுதீந்திர சுவாமிகள் 28ம் தேதி வருகை தந்து, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தார்.
பின்னர் பக்தர்களுக்கு அருளாசியுடன், மந்த்ராலய பிரசாதம் வழங்கினார். அடுத்த மாதம் ஜூலையில் பாலாலயம் செய்து, ஜனவரி 2020 ல் கும்பாபிேஷகம் செய்யப்படும் என்றார்.
கோவில் அர்ச்கர்கள் நரசிம்ம ஆச்சாரியர், ரகுஆச்சாரியர், அறங்காவல் குழுவினர்கள் முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், நிர்வாகிகள் ராமநாதன், உதயசூரியன், கதிர்வேல் உடனிருந்தனர்.