காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் செடிகளை அகற்ற கோரிக்கை
ADDED :2316 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் கோவில், நான்கு மாட வீதிகளை கொண்டுள்ளது. இக்கோவில், 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது. சோமவாரம், வெள்ளிக்கிழமை, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில், இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.இக்கோவிலில், ராஜகோபுரத்தின் மேற்புரத்தில் செடிகள் வளர துவங்கியுள்ளன. செடிகள் வளர, வளர அவற்றின் வேர்கள் ஊன்றினால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் அபாய நிலை உள்ளது.எனவே, ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை, உடனே அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.