காஞ்சிபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் துரியன் படுகளம் விமரிசை
காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம், பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த விழாவையொட்டி, நேற்று (ஜூன்., 30ல்), துரியன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
பெரிய காஞ்சிபுரம், பஞ்சுபேட்டை, பெரிய தெரு, பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த உற்சவம், 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த, 20ம் தேதி முதல், இரவு, 9:00 மணிக்கு, குண்டையார் தண்டலம் மாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவின், மஹா பாரத தெருக்கூத்து நாடகம் நடந்து வருகிறது.நேற்று (ஜூன்., 30ல்) காலை, துரியன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, கோவில் அருகில், களிமண்ணில், 40 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மான துரியோதனன் சிலை அமைக்கப்பட்டது. சிலை முன், துரியோ தனன், வதை நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.மாலையில், தீ மிதி விழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். இன்று (ஜூலை 1ல்), தருமர் பட்டாபிஷேகம் சொற்பொழிவு மற்றும் நாடகம் நடைபெறுகிறது.