விஷ ஜந்து பயம் போக்கும் பாம்புக்கோயில்
ADDED :2425 days ago
ஈரோடு - சத்தியமங்கலம் சாலையிலுள்ள தங்கமேடு கிராமத்தில் காஞ்சிக்கோயில் என்ற நாகர் ஆலயம் உள்ளது. எங்கும் இல்லாமல் இங்கு கருவறையின் மீது ராஜகோபுரம் உள்ளது. மண்டபத் துாண்களில் 18 சித்தர்கள், 12 ராசிகள், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரின் சிற்பங்கள் உள்ளன. காடாக உள்ள இப்பகுதியில் விஷ ஜந்துகளால் பாதிப்போர் அதிகம். விஷபயம் நீங்கவும் இங்கு வழிபடுகின்றனர்.