உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி கோயில் பாதுகாப்பு: தடுக்கும் அமைப்புகளுக்கு கண்டனம்!

மீனாட்சி கோயில் பாதுகாப்பு: தடுக்கும் அமைப்புகளுக்கு கண்டனம்!

மதுரை :மதுரை விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷனிற்கு புதுக்கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் சில தனியார் அமைப்புகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ஆதிசேஷன் தெரிவித்ததாவது :மீனாட்சி அம்மன் கோயில் புராதன கலாச்சார மையமாக விளங்குகிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விளக்குத்தூண் ஸ்டேஷன் பழைய கட்டடத்தை இடித்து, புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிராக தனியார் அமைப்புகள், பழைய கட்டடத்தை "புராதன கட்டடம் என மாவட்ட நிர்வாகத்திடம் பொய் மனு கொடுத்து அரசு திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டன. தொல்லியல் துறையின்கீழ் வராத இக்கட்டடத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தேசவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும். மதுரையில் பல புராதன கட்டடங்கள் சீரழியும் நிலையில், புராதன நதியான வைகை குப்பை கிடங்காக மாறுவதை கண்டுக்கொள்ளாத தனியார் அமைப்புகள், விளக்குத்தூண் ஸ்டேஷன் புதிய கட்டடத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது. என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !