உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் திருவக்கரை சந்திரமவுலீஸ்வர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மயிலம் திருவக்கரை சந்திரமவுலீஸ்வர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மயிலம் : திருவக்கரை சந்திரமவுலீஸ்வர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.மயிலம் அடுத்த திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலை 6:00மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது.

கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜபெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 6:30 மணிக்கு சந்திரமவுலீஸ்வரருக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !