மகுடஞ்சாவடியில் பருவ மழை வேண்டி 1,001 விளக்கு பூஜை
ADDED :2307 days ago
மகுடஞ்சாவடி: பருவ மழைவேண்டி, சித்தர்கோவில் அருகே, 1,001 திருவிளக்கு பூஜை நடந்தது. திருச்சி, துறையூர் ஓங்காரக்குடில் அகத்தியர் சங்கம் சார்பாக, உலக நன்மைக்காகவும், பருவ மழை வேண்டியும், சித்தர்கோவில் அடிவாரம் அருகேயுள்ள, இடங்கணசாலை பேரூராட்சி திருமண மண்டபத்தில், 1,001 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு அருகே, வெற்றிலை, விபூதி, குங்குமம், பூக்களை வைத்து நீண்ட வரிசையில் பக்தர்கள் அமர்ந்து சித்தர்கள் திருநாமங்களை உச்சரித்து ஜபம் செய்தனர். முன்னதாக காலை, 10:00 மணிக்கு, 131 சித்தர் திருநாம ஜபத்துடன் பூஜை தொடங்கி, ஒன்பது கட்டங்களாக நடந்தன. 3,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.