சேலத்தில் ஜூலை 4ல் பகவான் ஜகந்நாதரின் உலக பிரசித்தி பெற்ற ரத யாத்திரை
சேலம்: ஒடிசா மாநிலத்தின், ஜெகநாதபுரி என்றழைக்கப்படும் புரி நகரின், ஜகந்நாதர் தேரோட்ட திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தேரோட்டம் ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறும்.
விழாவில், முழுமுதற் கடவுள் பகவான் கிருஷ்ணர் ஜகந்நாதராக தோன்றி தன்னுடைய சகோதரர் பலராமர் மற்றும் தங்கை சுபத்ராவுடன் பிரம்மாண்டமான ரதத்தில் நகர வீதிகளில் வலம் வருவார். புரி நகருக்கு வர இயலாத உலக மக்களுக்கும் வழங்கிட விரும்பிய இஸ் கானின் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்வாமி பிரபுபாதர், கிருஷ்ண பக்தியை வழங்கி லண்டன், நியூயார்க், மாஸ்கோ, பாரிஸ், சிட்னி, டோக்கியோ போன்ற பெரிய நகரங்களின் தெருக்களில் புரியில் நடைபெறுவது போலவே, வெகு சிறப்பாக நடைபெற வழிவகுத்தார். அவ்வழியில், புரிக்கு செல்ல இயலாத சேலம் நகர வாசிகளும் பகவான் ஜகந்நாதர், பலராமர், சுபத்ராவின் கருணையை பெற, இந்த அற்புதமான ரத யாத்திரையை ஆண்டுதோறும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு நாளை (ஜூலை, 4) சேலத்தில் பிரம்மாண்ட முறையில் இஸ்கான் - சேலம் அமைப் பினர் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளனர். மாலை, 3:30 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் தொடங்கும் ஊர்வலம் கோட்டை மைதானம், ஜவுளிக்கடை, குகை, தாதகாப்பட்டி வழியாக சீலநாயக்கன்பட்டி சந்திர மஹாலை மாலை, 6:00 மணியளவில் சென்றடையும். அங்கு, 6:00 மணி முதல், 8:30 மணி வரை மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. பஜனை, உபன்யாசம், பிரம்மாண்ட நாடகம் நடைபெற உள்ளது.