சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் புதிதாக 108 திவ்யதேச பெருமாள் சுதை சிற்பங்கள்
சேலம்: ஒரே கோவிலில், 108 வைணவ திவ்யதேச பெருமாள்களின் சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு வரும், 11ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
சேலம், அம்மாபேட்டையில், சவுந்திரவல்லி சமேத சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், புதிதாக, 108 வைணவ திவ்யதேச பெருமாள்களை, அச்சு அசலாக கோவில் வளாகத்தை சுற்றிலும் சுதை வடிவில் வடிவமைத்துள்ளனர். இவற்றோடு சவுந்திரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 8 மாலை, 6:00 மணிக்கு வாஸ்து யாகத்துடன் துவங்குகிறது.
பல்வேறு யாகபூஜைகள் முடிந்து வரும், 11ல் வாணமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர், திருக் கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் முன்னிலையில் காலை, 8:00 மணி முதல், 8:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, 108 திவ்யதேச பெருமாள் மற்றும் மூலவர் சவுந்திரராஜருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இக்கோவிலை வழிபட்டால், 108 திவ்யதேச பெருமாள்களையும் ஒருசேர தரிசித்த புண்ணியம் கிட்டும்.