உடுமலை திருப்பதி கோவில், கும்பாபிஷேக விழாவை ஒட்டி 35 ஆயிரம் லட்டு பிரசாதம்
                              ADDED :2311 days ago 
                            
                          
                           உடுமலை:உடுமலை திருப்பதி கோவில், கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 4ல்) நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் துவங்கியது கடந்த மாதம் 30ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இன்று (ஜூலை 4ல்) கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க, 35 ஆயிரம் லட்டு மற்றும் 15 ஆயிரம் மைசூர்பா தயார் செய்யப்பட்டுள்ளது.