உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி வேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி வேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி:வேதீஸ்வரர் கோவிலின், மஹா கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை 4ல்.,) நடந்தது. திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் கிராமத்தில் உள்ள நாயகி உடனுறை வேதீஸ்வரர் சுவாமி கோவிலின், மஹா கும்பாபிஷேக விழா, 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

கோவில் வளாகத்தில், 5 யாகசாலை, 1008 கலசங்கள் வைத்து, நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று, காலை, 9:30 மணிக்கு, கலச ஊர்வலம் மற்றும் கோபுர கலசத்தின் மீது, கலசநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து, விநாயகர், முருகர், வேதநாயகி, வேதீஸ்வரர் மற்றும் நவகிரகங்களுக்கு கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷே கம் மற்றும் தீபாராதனையும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வேதீஸ்வரரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !