பெண்ணாடம் அருகே ஆடம்பர தேர் பவனி
ADDED :2324 days ago
பெண்ணாடம்: பெ.பொன்னேரி தோமையார் அன்னை ஆலயத்தில், ஆடம்பர தேர் பவனி நடந்தது. பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில் புனித தோமையார் அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மாலை பங்கு தந்தை குழந்தைசாமி மற்றும் பங்கு மக்கள் சார்பில் கூட்டு திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஆடம்பர தேரில் தோமையார் அன்னை பவனி நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:30 மணியளவில் கொடியிறக்கத்துடன் ஆண்டு பெருவிழா நிறைவடைந்தது.