உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் தேவநாத சுவாமி கோவில்நுழைவு வாயில் திறப்பு விழா

கடலூர் தேவநாத சுவாமி கோவில்நுழைவு வாயில் திறப்பு விழா

கடலூர்: கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பிரதான நுழைவு வாயில் திறப்பு விழா நேற்று (ஜூலை 4ல்.,) நடந்தது.

திருவந்திபுரம் செங்கமல தாயார் சமேத தேவநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக நுழைவு வாயில் கட்டப்பட்டது. நுழைவு வாயிலின் மேல் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதற்கான முழு செலவையும் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.அதற்கான திறப்பு விழா நேற்று (ஜூலை 4ல்.,) காலை 8 மணிக்கு துவங்கியது. வாஸ்து சாந்தி, ஹோமம் நடந்தது. பின்னர் நுழைவு வாயிலின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் பன்னீர்செல்வம், அவரது மகன் கதிரவன், அய்யப்பன், அவைத் தலைவர் தங்கராசு, தேவி ஓட்டல் பசுவலிங்கம், டிப்பர் லாரி சங்க தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை 8 மணிக்கு துவங்கியது. வாஸ்து சாந்தி, ஹோமம் நடந்தது. பின்னர் நுழைவு வாயிலின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் பன்னீர்செல்வம், அவரது மகன் கதிரவன், அய்யப்பன், அவைத் தலைவர் தங்கராசு, தேவி ஓட்டல் பசுவலிங்கம், டிப்பர் லாரி சங்க தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !