உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தி வரதரை 90 ஆயிரம் பேர் தரிசனம்

அத்தி வரதரை 90 ஆயிரம் பேர் தரிசனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதரை நேற்று, ஒரு மணி நேரத்தில், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. எட்டாம் நாளான நேற்று, மிதமான கூட்டம் காணப்பட்டது.சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்த அதிகளவிலான மக்கள் கூட்டத்தால், சில முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வடக்கு மாடவீதியில், பக்தர்கள் வரிசையில், நிழலில் செல்ல மேற்கூரைகள் அமைக்கப்படுகின்றன. குடிநீர் தொட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சனி, ஞாயிறு என இரு நாட்களில், தலா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்கள் கோவிலில் குவிந்ததால், பலர் மயங்கி விழுந்து அவதிப்பட்டனர்.வார நாட்கள் நேற்று துவங்கியதால், மிதமான அளவே பக்தர்கள் வந்தனர். நேற்று காலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, 90 ஆயிரம் பக்தர்கள், அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.ஒரு மணி நேரம் முதல், ஒன்றரை மணி நேரத்தில், பக்தர்கள் நேற்று, தரிசனம் செய்தனர்.தி.மு.க., தலைவர், ஸ்டாலினின் மனைவி துர்கா, நடிகர், பார்த்திபன், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், அத்தி வரதரை, நேற்று, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !