திண்டுக்கல்லில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வர சுப்பிரமணியன் கூறியதாவது: வருகிற 14-ம் தேதி ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய தமிழகம் முழு வதும் ஒன்றியம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
செப்.2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை இந்த ஆண்டு ’தெய்வீக தமிழை காப்போம், போலி தமிழனவாதத்தை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் கொண்டாட உள்ளோம்.தமிழகம் முழு வதும் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்கு ஆளும், எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின் றனர். இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க., அரசு வழிவகை செய்ய வேண்டும். பொன்மாணிக்கவேல் நல்ல அதிகாரி. அவருக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வில்லை. சிலை கடத்தலில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இருப்பதால் பயப்படு கின்றனர். தேனி, கம்பம் பகுதியில் மலைவாழ் மக்களோடு நக்சல்கள் கலந்துள்ளனர். உளவுத் துறை சரியாக செயல் பட்டு, நக்சலைட், பிரிவினைவாதிகளை கண்டுபிடிக்க வேண்டும். கோவை, திருப்பூரில் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். கலவரம் நடத்த சர்வதேச சதி நடந்து வருகிறது. தமிழக உளவுத்துறை பலவீனமாக உள்ளது, என்றார்.