புதுச்சேரி சுந்தரவிநாயகருக்கு ஆனி திருமஞ்சனம்
ADDED :2250 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆனி திருமஞ் சனம் நடந்தது.முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதியில் உள்ள சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில், சிவகாம சுந்தரி சமேத நடராஜ சுவாமிக்கு ஆனித் திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது.காலை 9:00 மணிக்கு, பட்டினத்துசாமிகள் என்ற தலைப்பில் கம்பன் வைத்தியநாதன் சிறப்புரை யாற்றினார். விபூதி, தயிர், தேன், பால், இளநீர், நெய், சந்தனம் உள்ளிட்ட 18 வகை பொடி மற்றும் திரவியங்களால் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு ரமணா கலைக்குழுவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.