உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் செல்வ விநாயகர் கோவிலில் வரும், 11ல் கும்பாபிஷேகம்

திருப்பூர் செல்வ விநாயகர் கோவிலில் வரும், 11ல் கும்பாபிஷேகம்

திருப்பூர்:கஞ்சம்பாளையம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், கும்பாபிஷேகம், வரும்  11ல் நடக்கிறது.திருப்பூர், கஞ்சம்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர், மகா  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று (ஜூலை., 9ல்) துவங்குகிறது.

காலை, 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை அலங் காரம் நடக்கிறது; மாலை, 5:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடக்கிறது.

பிற்பகல், 3:00 மணிக்கு, கருப்பராயன் கோவிலிலிருந்து, மேளதாளத்துடன் முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்துவரப்படுகிறது.நாளை  (ஜூலை., 10ல்) காலை,  9:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, ஸ்துாபிஸ்தாபனம்; மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, யந்த்ர  ஸ்தாபனம்.வரும், 11ம் தேதி காலை, 5:45 மணிக்கு நான்காம் கால யாக  பூஜையை தொடர்ந்து, 9:30 மணிக்கு, செல்வ விநாயகர், மகா மாரியம்மன்  கும்பாபிஷேகம் நடக்கிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவில் அர்ச்சகர், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயம் முதல்வர் ராஜபட்டர், கும்பாபிஷேகம் செய்விக்கிறார்.  

அன்று  (ஜூலை., 11ல்) காலை, 10:30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.விழாவின் ஒருபகுதி யாக,  தினமும் இரவு, 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது. இன்று  (ஜூலை., 9ல்) இரவு, வெள்ளியம் பாளையம் வெற்றிவேலவன் குழுவின் வள்ளி கும்மியாட்டம், 10ம் தேதி, திருப்பூர் கொங்கு பண்பாட்டு மையம் ஈசன் பெருஞ்சலங்கை  ஆட்டக்குழுவின் பாரம்பரிய பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !