உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி காளியம்மன், சிவன் கோயிலில் வருடாபிஷேகம்

பழநி காளியம்மன், சிவன் கோயிலில் வருடாபிஷேகம்

பழநி:பழநி முருகன் கோயிலைச் சேர்ந்த உஜ்ஜையினி மகா காளியம்மன் கோயில், கோதை மங்கலம் கோதீஸ்வரர் ஆகிய கோயில்களில் வருடாபிஷேக விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு, பழநி காமராஜர் நகரில் உள்ள உஜ்ஜைனி மகா காளியம்மன் கோயில் உட்பிரகாரத்தில், புனிதநீர் நிரம்பிய கும்ப கலசங்கள் வைத்து யாகபூஜையும், அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது.

இதேபோல கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம் யாகபூஜை, அபிஷேகம், அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப் பாளர் முருகேசன், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். நாளை (ஜூலை 11ல்)ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் வருடாபிஷேகவிழா நடக்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !