காரமடை காமாட்சியம்மன் திருக்கல்யாணம்
ADDED :2378 days ago
காரமடை:காரமடையில் செங்குந்தர் பாவடியில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆனித்திங்கள் உத்திரத் திருமஞ்சன விழா நடைபெறும். இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன விழா கோலாகலமாக நடந்தது.
காலையில் கணபதி பூஜை, கணபதி வேள்வி, கலச ஆவாகனம், பூர்ணாஹூதி நடந்தது. தொடர் ந்து காமாட்சி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், மூலிகை திரவியங்களால் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடந்தது. அம்மனுக்கு பெண்கள் சீர்வரிசை சமர்பித்தனர். கோவில் மகா மண்டபத்தில், காமாட்சி அம்பிகா சமேத ஏகாம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு, வளையல், குங்குமம், மஞ்சள் பிரசாதமாக வழங்கப்பட்டது.