உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் காயத்ரி கோயில் கும்பாபிஷேகம்

ராஜபாளையம் காயத்ரி கோயில் கும்பாபிஷேகம்

ராஜபாளையம்:ராஜபாளையம் யானைக்கல் அருகே ஸ்ரீ காயத்ரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜூலை., 10ல்) மகா சங்கல்பம் முதல் அங்குரார்ப் பணம், யந்திர பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று (ஜூலை., 11ல்) காலை 7:30 மணிக்கு விமான கோபுரம், ஸ்ரீ காயத்ரி, விநாயகர், முருகன், கருப்பசாமி, தட்சினாமூர்த்தி, ஆஞ்சனேயர் மற்றும் நவக்கிரஹங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தரிசித்து சென்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ரவிக்குமார் தலைமையில் கோயில்விழாக்கமிட்டியி னர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !