உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்

மாமல்லபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்

மாமல்லபுரம்:இளையனார்குப்பம், ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று, (ஜூலை., 11ல்) விமரிசையாக நடந்தது.

கல்பாக்கம் அடுத்த, விட்டிலாபுரம் ஊராட்சி, இளையனார்குப்பம், கிழக்கு கடற்கரை சாலை பகுதி யில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.பழமையான இக்கோவிலை அகற்றி, தற்போது புதிய கோவிலை பக்தர்கள் அமைத்துள்ளனர்.

இதன் கும்பாபிஷேகம், நேற்று (ஜூலை., 11ல்) காலை நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன் தினம் (ஜூலை., 9ல்), மாலை, கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாட்டு சடங்குகள் துவங்கின. நேற்று (ஜூலை., 11ல்) காலை, கணபதி, கோ, நவக்கிரக, கும்ப, நாடி வழிபாடுகளைத் தொடர்ந்து, சன்னிதி விமானம், மூலவருக்கு, புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !