சேதமடைந்த அய்யனார் கோவில் புனரமைக்க கோரிக்கை
ADDED :2637 days ago
பெண்ணாடம்: ஓ.கீரனுாரில் சேதமடைந்த அய்யனார் கோவிலை புனரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் ஊரணி பொங்கல், வார, மாத வழிபாடு நடப்பது வழக்கம். தற்போது, கோவிலில் ஒரு கால பூஜை நடக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, போதிய பராமரிப்பின்றி உள்ள தால் கோவில் சேதமடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, செடி, கொடிகள் அதிகளவு வளர்ந்து வருகிறது. இதனால், கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் உள்ளே சென்று பூஜை செய்ய அச்சம் அடைகின்றனர். எனவே, இக்கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.