மாமல்லபுரம் பாண்டுரங்கருக்கு ஏகாதசி உற்சவம்
ADDED :2638 days ago
மாமல்லபுரம்: விட்டிலாபுரம், பாண்டுரங்கர் கோவிலில், ஆஷாட ஏகாதசி உற்சவம், கோலாகலமாக நடந்தது.கல்பாக்கம் அடுத்த, விட்டிலாபுரத்தில், விஜயநகர ஆட்சியில் கட்டிய, விட்டல் பாண்டுரங்கர் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது.வைணவ கோவில்களின் வைகுண்ட ஏகாதசி நாளை போன்று, இக்கோவிலில், ஆனி மாத ஏகாதசி நாளை, ஆஷாட ஏகாதசியாக, கடைபிடித்து வழிபடுகின்றனர்.இந்நாளான நேற்று, பாண்டுரங்க சுவாமி மலர்களால் அலங்கரித்து, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.சுவாமி, அவரது பக்தர்கள் லீலைகள் குறித்து, முரளிதர சுவாமி கீர்த்தனை பாடி, உபன்யாசம் செய்தார். பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.